கேரளாவிற்கு செல்லும் கனிம வள கடத்தலை தடுத்து நிறுத்தஇந்திய ஐக்கிய கம்யூ. கோரிக்கை
1 min read
United Communist Party of India demands a halt to the smuggling of mineral resources to Kerala
22.10.2026
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காளியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காளியப்பன் கூறியதாவது:-
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் கனிம வள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். தென்காசி, செங்கோட்டை தாலுகா பகுதி மக்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு குடி இருக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
சங்கரன்கோவில் தாலுகா கோ.மருதப்பபுரம் கிராமத்தில் அரசு வழங்கிய நிலத்திற்கு கணினி பட்டா வழங்க வேண்டும்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவக் கழிவு, கோழி கழிவு, மற்றும் அனைத்து குப்பை கழிவுகளையும் கொண்டு வந்து கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 2500 மற்றும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் அறிவித்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காளியப்பன் கூறினார்.