October 23, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுபோதை தகராறில் மீனவர் கத்தியால் குத்தி கொலை

1 min read

Fisherman stabbed to death following a dispute while intoxicated

23.10.2026
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மீனவரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பழனி (வயது 45). மீனவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் செந்தில்வேல்(30) என்பவருடன் சேர்ந்து இன்று காலை 8 மணி அளவில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் வைத்து மதுபானம் குடித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தகராறின்போது பழனி, செந்தில்வேலை கீழே தள்ளிவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்வேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனியை சராமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பழனி உயிரிழந்தார்.

திரேஸ்புரம் கடற்கரையில் மீன் ஏலமிடும் நேரத்தில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் பழனியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செந்தில்வேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில் பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட பழனிக்கு மனைவியும் இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *