October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை ஜனாதிபதி பேட்டி

1 min read

A Tamil will definitely become Prime Minister: Vice President in an interview

30.10.2026
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் அர்லேகரும் உடன் இருந்தார்.
இதன் பின் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

மீனாட்சி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க விரும்புகிறேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். அரசியல் தொடர்புடைய கேள்விக்கு நானோ, கவர்னரோ பதிலளிப்பது சரியாக இருக்காது. அமைச்சரிடம் கேளுங்கள்.

தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு என்றைக்கும் உள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உள்ளது. குஜராத்தை சேர்ந்தவர், கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதமர் ஆன போது, தமிழகத்தை சேர்ந்தவரும் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா வல்லரசு ஆவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அனைவரையும் வழிநடத்தும் நாடாகவும், மனித இனத்தை அரவணைத்து செல்லும் நாடாகவும் உருவாகும். இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்தியா வல்லரசு ஆகும் நம்பிக்கை வந்துள்ளது. 4வது வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் முதலாவது வல்லரசு நாடாக மாறும்.

இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நிலையில் திடீரென மின்சாரம் தடைபட்டது.
இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மீனாட்சி கோவிலக்கு வந்தார். அவர் மாலை 5:35 மணிக்குக் கோயிலுக்குள் நுழைந்தார். தரிசனம் முடித்து மாலை 6:25 மணிக்கு வெளியே வந்தார்.

அவரின் வருகை முன்னிட்டு, பிற்பகல் 3:30 மணி முதல் கோயில் முழுவதுமாக ஜெனரேட்டர் (மின் இயற்றி) வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டிருந்தன. மின்வாரியத்தின் உதவி நிர்வாகப் பொறியாளர் கோயில் மின் அறையில் உடனிருந்து உதவிகளை மேற்கொண்டார்.

தரிசனம் முடித்த பிறகு, கிழக்கு கோபுரத்திற்கு முன் துணை ஜனாதிபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த நேரத்தில், மின் அறையில் ஏற்பட்ட உட்புறக் கோளாறு காரணமாக, கோயிலுக்குள் மின்சாரம் தடைபட்டது.

உடனடியாக, மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து மின்சார வாரியத்தின் (EB) விநியோகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம் 2 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *