November 3, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 456 மனுக்கள்

1 min read

456 petitions submitted at the public grievance redressal meeting in Tenkasi

2.11.2026
தென்காசி மாவட்டத்தில் திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மோனிகா ராணா, தலைமையில் நடைபெற்றது இதில் பொதுமக்களிடம் 456 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (02.11.2026) மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, தலைமையில் திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து இலவச உதவித்தொகை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா. பட்டா மாறுதல் உத்தரவு. வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு. மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 456 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, அறிவுறுத்தினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த திங்கள் கிழமை அன்று பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் தற்போதைய நிலை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆ.ரா.சிவராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *