November 2, 2026

Seithi Saral

Tamil News Channel

ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து 8 பேர் பலி

1 min read

8 people killed by electrocution in Rajasthan‘

2.11.2026
ராஜஸ்தானில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்கம்பியில் இயந்திரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து எட்டு தொழிலாளர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும், மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டம், சப்போலி கிராமத்தில் மக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று சாலை அமைக்கும் பணியில் சரளை கற்களை கலைப்பதற்காக இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

அப்போது, அந்த இயந்திரம் மேலே சென்ற உயர் மின் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் இயந்திரம் வழியாக மின்சாரம் இறங்கி அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது.
இந்த விபத்தில் ஹரிராம் குர்ஜார், 30, மங்கள்சந்த் குர்ஜார், 22, கலுராம் குர்ஜார், 20, பவன் குர்ஜார், 23, விஷ்ணு சைனி, 38, சுரேஷ் சைனி, 30, முகேஷ் சைனி, 27, மற்றும் பதேசந்த் சைனி, 32, ஆகிய எட்டு பேர் சம்பவ இடத்திலேயே கடுமையான தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

மேலும், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *