November 2, 2026

Seithi Saral

Tamil News Channel

முன்பை விட கூடுதலாக நகைகளை அணிந்து.. யூடியூப்பில் களமிறங்கிய மதுமிதா

1 min read

Madhumitha makes an appearance on YouTube, wearing even more jewelry than before

2.10.2026
நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் மதுமிதா (வயது 28). இவரது கணவர் வினோத்குமார் (33). இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய்நோட்டுகளை அள்ளி வீசுவது, தனது பெண் குழந்தை மீது ரூபாய் நோட்டுகளைக் கொட்டுவது போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் மதுமிதா.

இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி மர்ம நபர்கள் புகுந்து 118 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (30) உட்பட 4 பேரைக் கைது செய்தனர். கைதானவர்கள் கூறுகையில், மதுமிதாவின் ஆடம்பர வீடியோவை பார்த்தே அவரது வீட்டில் கொள்ளையடித்ததாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, மதுமிதா நெல்லையில் உள்ள ஸ்பா ஒன்றில் பணியாற்றியபோது தன்னை ஏமாற்றி நகைகளைப் பறித்துக்கொண்டதாகக் கான்ட்ராக்டர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து வந்த இப்பிரச்சினைகள் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக எந்தவித வீடியோக்க ளையும் வெளியிடாமல் இருந்தார் மதுமிதா.

இந்த சூழலில் தற்போது அவர் மீண்டும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அதில், வழக்கம்போல் அதிக நகைகளை அணிந்து கொண்டு, தனது குழந்தையின் 3-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சீதையைத் தீக்குளிக்க வைத்தீர்கள், அவர் தீக்குளித்த பிறகும் அவரை யாரும். நம்பவில்லை. அவதூறுகள், கேலி கிண்டல் பேச்சுகளுக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

என்னைப் பற்றி பேசப் பேச நான் உயர்ந்து கொண்டேதான் இருப்பேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள், எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ்கிறோம்.

யாராலும் யாரையும் அழிக்க முடியாது. ஒரு பெண் நன்றாக இருந்தால், அந்த குடும்பத்தை எப்படி வீழ்த்தலாம் என்று நினைக்கிறீர்கள்? அது ஒருபோதும் நடக்காது.

நானும் என் கணவர் மற்றும் குழந்தையும் எப்போதும் நன்றாகவே இருப்போம். கடவுள் ஒருவர் இருக்கிறார். அதனால் எங்களை யாராலும் அழிக்க முடியாது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எவ்வளவோ அவதூறாக பேசினார்கள், ஆனால் அவர் இரும்பு மனிதராக நிமிர்ந்து நின்றார். எனக் கூறி பதிவிட்டுள்ளார்.

மேலும், தங்களுக்கு ஆதரவளிக்கு ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். மதுமிதா இதுவரை 6,695 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அவரை 4,85,000 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவரது வீட்டில் கொள்ளை நடந்த பிறகே அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

அவரது சில வீடியோக்களை 30 முதல் 35 லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளனர். நேற்று காலை அவர் வெளியிட்ட 8 வீடியோக்களையும் ஏராளமானோர் பார்த்துள்ளனர். முன்பை விட கூடுதலாக நகைகளை அணிந்து கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு வீடியோவை மட்டும் அதிகபட்சமாக 10 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். இந்த 8 வீடியோக்களை யும் சேர்த்து மொத்தம் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், மதுமிதா மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறார். வடிவேலு பாணியில் எனக்காடா எண்டு கார்டு போடூறிங்க எனக்கு எண்டே கிடையாது என அந்த டயலாக் தான் நியாபகத்திற்கு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *