November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக நூலகங்களுக்கு 30 நாட்களில் வாங்கப்பட்ட புத்தகங்கள்: மோசடியில் புதிய தகவல்

1 min read

Books purchased for Tamil Nadu libraries within 30 days: New details emerge regarding the fraud

14.11.2026
ரூ. 190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டு தமிழக நூலகங்களுக்கு அவசர கதியில் 30 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்காக புத்தகங்கள் வாங்க மொத்தம் ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவசர கதியில் 30 நாளில் மோசடி புத்தகங்கள் வாங்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து 70,674 போலி புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில் இன்னும் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாகவும் மோசடி குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் காந்திபுரத்தில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு போலி நூல்கள்

கொள்முதல் செய்யப்பட்டு, அதன்மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பெரியார் அறிவுலகத்துக்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும், அதனை தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்படி நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து திமுக, தவெக இடையே மோதல் வலுத்து வருகிறது. மேலும் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முறைகேடு புகாருக்குள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள், பெரியார் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

கொள்முதல் செய்யப்பட்டு, அதன்மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பெரியார் அறிவுலகத்துக்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும், அதனை தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்படி நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து திமுக, தவெக இடையே மோதல் வலுத்து வருகிறது. மேலும் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முறைகேடு புகாருக்குள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள், பெரியார் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் சுமார் ரூ. 22 லட்சம் பணம் கொண்ட மூன்று வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இதில் தொடர்புடைய நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய புத்தகங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை நவம்பர் 16க்குள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கோவை ‘பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பொது நூல கங்களுக்காக விதிமுறைகளை மீறி, வெறும் 30 நாட்களில் குறுக்கு வழியில் அவசர அவசரமாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும், இதில் போலி எழுத்தாளர்கள் பெயரிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலமும் உருவாக்கப்பட்ட சுமார் ரூ. 7 கோடி மதிப்பிலான 70,674 சந்தேகத்திற்குரிய நூல்கள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்கிறது, மேலும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

இது குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 மாவட்ட நூலகங்கள் தவிர கோவை, திருச்சி, சேலம், கடலூர், திருநெல்வேலி ஆகிய 5 அறிவுலகங்களுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு ரூ. 190 கோடி ஒதுக்கப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியில் 2025 நவம்பர் 5 அன்று வெளியிடப்பட்ட ஓர் அரசாணைப்படி, இந்த செயல்முறையை மேற்பார்வையிடுவதற்காக நூல் பரிந்துரைக்குழு, நூல் தேர்வுக்குழு, நூல் கொள்முதல் பேச்சுவார்த்தைக்குழு மற்றும் உயர்நிலைக்குழு என 4 குழுக்களை அமைத்தது. பரிந்துரைக்குழுவில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் நூல் விமர்சகர்கள் உட்பட 137 உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஜனவரி 9 அன்று கூட்டம் நடந்தது. அதில் 112 பேர் கலந்துகொண்டனர். பொதுவாக நூலகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்யும் போது குறிப்பிட்ட செயல்முறைகள் பின்பற்றப்படும். அந்த வகையில் குழு பரிந்துரைக்கும் பணிக்கே பொதுவாக மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என்றும், அதனைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளை ஆய்வு செய்தல், பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் விலை பேச்சுவார்த்தைகள் நடத்துதல் மற்றும் உயர்நிலைக்குழுவின் இறுதி ஒப்புதல் பெறுதல் ஆகிய நடைமுறைகள் தொடரும்.

இந்த முழுப்பணிகளும் செயலுக்கு வர குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நடைமுறைக்கு பதிலாக ஒரு மாதத்திற்குள் கொள்முதல் நிறைவடைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பிரபல பதிப்பகத்தார் கூறியதாவது:- புத்தக கொள்முதல் நடைமுறையில் முதற்கட்ட பரிந்துரை இல்லாமல், சர்ச்சைக்குரிய தலைப்புகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே பெரிய அளவில் உறுப்பினர்கள் உள்ள பரிந்துரைக்குழு இது போன்ற முறைகேடுகளுக்கு வழிவகுத்திருக்க வாய்ப்பில்லை. எனவே இதற்கு பொறுப்பானவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அடையாளம் காண வேண்டும். மேலும், டிஜிட்டல் கொள்முதல் முறை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் உண்மை வெளிவரும் என நம்பலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *