November 18, 2026

Seithi Saral

Tamil News Channel

செஞ்சி சிறுமி மாயமாகி 37 நாட்கள்…கிராம மக்கள், பெற்றோர் கவலை

1 min read

37 days since the girl from Gingee went missing… villagers and parents concerned

17/11/2026
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வடிவேலு-பவானி.

இந்த தம்பதியின் 7 வயது சிறுமி கடந்த மாதம் 12-ந் தேதி அதிகாலை மாயமானார். முதலில் இந்த வழக்கை சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் கடந்த 21-ந் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.க்கள் கீதா, வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக சிறுவாடி காப்புக்காட்டில் வனத்துறையினர் உதவியுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அதில் எந்த தடயமும் கிடைக்காததால், 3-வது நாளாக நேற்றும் தேடும் பணி நடந்தது.

4 குழுக்களாக பிரிந்து காட்டின் உட்பகுதி, பாறை இடுக்குகள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்றது. ஆனாலும் எந்த தடயமும் சிக்கவில்லை.

இதற்கிடையே, சிறுமியின் வீட்டிற்கு எதிரே உள்ள செங்கல் சூளை பகுதியிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராஜு தலைமையில் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு செங்கல் சூளை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல் சூளை பகுதியில் இருந்து சாம்பலை எடுத்து, அந்த சாம்பலை தடய அறிவியல் துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சிறுமி மாயமாகி 37 நாட்கள் ஆகிறது. ஆனாலும் சிறுமி பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் ஆலம்பூண்டி கிராம மக்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *