பிலிப்பைன்சின் பாரம்பரிய ஆடை அணிந்து இரவு விருந்தில் மோடி பங்கேற்பு
1 min read
Modi attends dinner wearing traditional Philippine attire
17.11/2026
பிலிப்பைன்சின் பாரம்பரிய ஆடை அணிந்து பிரதமர் மோடி இரவு விருந்தில் பங்கேற்றார்.
ஆசியான் அமைப்பு நடத்தும் 23-வது ஆசியான்-இந்தியா மாநாடு, 21-வது ஆசியான்-கிழக்காசிய மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த ஆண்டு ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் வகிக்கிறது. இதனால், அதன் தலைநகர் மணிலாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது.
இதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். ஆசியான் மாநாட்டில் இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் வர்த்தகம், பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
49-வது ஆசியான் மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் தலைவர்களுக்காக பிலிப்பைன் சர்வதேச பாரம்பரிய மையத்தில் இந்த இரவு விருந்து நடந்தது. இதனை முன்னிட்டு பிலிப்பைன்சின் பாரம்பரிய உடையை அணிந்து பிரதமர் மோடி, இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த பயணத்தின்போது, மணிலா சர்வதேச விமான நிலையத்தில், இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து, உரையாடி அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை அவர் தெரிவித்து கொண்டார். அப்போது அவர்களுடன் கைகுலுக்கினார்.
இதன்பின்னர் நடந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சியை கண்டு களித்ததுடன், ராமாயண மேடை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அதனுடன், பிலிப்பினோ மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்களின் பூர்ண கும்ப சுலோகங்களின் வாசிப்பையும் அவர் அமைதியாக கேட்டு கொண்டார்.