November 19, 2026

Seithi Saral

Tamil News Channel

டிரம்ப் அரசு கொண்டு வந்த விசா விதிகளை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

1 min read

US court strikes down visa rules introduced by the Trump administration

17.11.2026
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு கொண்டுவந்த விசா விதிகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளில் பல மாற்றங்களை அமெரிக்க அரசு கொண்டு வந்தது. அதன்படி ஏற்கனவே அமலில் இருந்த நடைமுறையின்படி, எப் 1 விசா

எனப்படும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா வைத்திருப்போர், ‘டியூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ்’ என்ற சலுகையின் கீழ், அவர்களின் படிப்பு முடியும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும்.
ஆனால், டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த புதிய விதிப்படி அமெரிக்காவிற்கு வரும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே எப் 1 விசா அனுமதி வழங்கப்படும். மேலும், படிப்பு முடிந்த பின் தாய்நாடு திரும்புவதற்காக வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் அவகாசம், 30 நாட்களாக குறைக்கப்படுகிறது.

அதற்கு மேல் தங்க வேண்டியிருந்தால், தனியாக அனுமதி

நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல்,

வெளிநாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில்

அதிகபட்சமாக தங்கி இருக்க 5 ஆண்டுகள் வரை அனுமதி

வழங்கப்பட்ட நிலையில் புதிய விதிப்படி 240 நாட்கள் (சுமார் 8

மாதங்கள்) மட்டுமே தங்கி இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் நாட்கள் தங்கி இருக்க வேண்டுமானால் அதற்கு

அமெரிக்க அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
குறிப்பாக, சீனாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள்

அமெரிக்காவில் 3 மாதங்கள் மட்டுமே தங்க அனுமதி

வழங்கப்படுகிறது. சீன பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில்

கூடுதலாக தங்கி இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு

கூடுதலாக 3 மாதங்கள் தங்க அனுமதி வழங்கப்படும்.

புதிய விசா கட்டுப்பாடுகள் அமெரிக்காவுக்கு புலம்பெயரும்

வெளிநாட்டினரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில்

டிரம்ப் அரசால் கொண்டு வரப்பட்டது. அதேவேளை, டிரம்ப் அரசின் புதிய விசா விதிகளை எதிர்த்து அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி டேனியல் ஸ்லேயர், வெளிநாட்டு மாணவர்கள் , வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில் தங்கும் காலத்தில் கட்டுப்பாடுகள் விதித்து டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த விசா விதிகளை அதிரடியாக ரத்து செய்தார்.
மாவட்ட நீதிபதியின் இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்

வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *