June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கொக்கு கறி சாப்பிட்ட நர்சிங் கல்லூரி மாணவி பலி

Nursing college student killed after eating crane curry

19.5.2023
வந்தவாசி அருகே கொக்கு கறி சாப்பிட்ட நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கொக்கு கறி

திருவண்ணாமலை வந்தவாசி வந்தவாசி அருகே பொன்னங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 38). இவரது மகள் மஞ்சு என்ற அஸ்வினி (18). இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் மஞ்சு கடந்த 11-ந் தேதி வயலுக்குச் சென்ற போது வயல் சேற்றில் கிடந்த கொக்கு ஒன்றை எடுத்து வந்து கொக்குக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வாந்தி வந்தது. உடனடியாக அவரை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.