Sharad Pawar admitted to hospital
21.4.2026
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 85). மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான சரத்பவார் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில், சரத்பவாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பீட்ச் கென்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதமும் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.