Tenkasi: Constituency-wise details of votes received
6-.5.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், இராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் என்னும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி யை விட ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 1999 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் 82,342 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 34,149 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன்
50,328 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் இசை மதிவாணன்
23,171 வாக்குகளும் பெற்றனர்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 85,951 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 35,112 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் 45,429 வாக்குகளும், நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 14,047 வாக்குகளும் பெற்றனர்.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 61,592 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 37,745 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 29,138 வாக்குகளும், பாதக வேட்பாளர் இசை மதிவாணன் 23,847 வாக்குகளும் பெற்றனர்.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 64,475 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 40,079 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 33,675 வாக்குகளும், நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 19,018 வாக்குகளும் பெற்றனர்.
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 60,632 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 38,000 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் 25,798 வாக்குகளும், நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 25,013 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 68,033 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 43,205 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 22,614 வாக்குகளும், பாதக வேட்பாளர் இசை மதிவாணன் 23,654 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அதன்படி தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் கூடுதலாக 48,193 வாக்குகளும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 50,839 வாக்குகளும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 23,847 வாக்குகளும், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 24,396 வாக்குகளும், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 22,632 வாக்குகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 24,828 வாக்குகளும் பெற்று முன்னிலையில் வந்துள்ளார்.