April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அவினாசி அருகே விபத்து; பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி 21 பேர் பலி

1 min read

Container truck crashes into bus 21 killed; near Avinashi;

21/2/20202
அவினாசி அருகே கேரள பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி 20 பேர் பலியானார்கள். பஸ் மீது கண்டெய்னர் சரிந்து விழுந்ததுதான் இத்தனை பேர் சாவுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

விபத்து
அவினாசி அருகே நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை கேரள அரசுப்பேருந்து – கண்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணை தகவல்கள் கூறுகின்றன.

பெங்களூருவில் இருந்து திருப்பூர் வழியாக, ஆலப்புழா நோக்கி கேரளா அரசு விரைவுப் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேநேரம் சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வந்து கொண்டு இருந்தது.
அதிகாலை மூன்றரை மணியளவில் அவினாசி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது, கண்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பையும் உடைத்துச் சென்று பஸ் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் கண்டெய்னர், பஸ் மீது சரிந்துள்ளது. இதனால் பஸ் நசுங்கியது. பஸ்சின் ஒரு பகுதி சின்னாபின்னமானது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

21 பேர் பலி

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பஸ் டிரைவர் உட்பட 21 பேர் இறந்தனர் அவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.

மேலும் 24 பேர் காயம் அடைந்தனர்.அவர்கள் அவினாசி, திருப்பூர் மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக கேரளாவில் இருந்து சிறப்பு குழு அவினாசிக்கு விரைந்துள்ளது.

விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், பலர் தூக்கத்தில் இருந்ததாகவும், முன்பகுதியில் இருந்தவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும், காயமின்றி தப்பிய ஒருவர் கூறியுள்ளார்.

விபத்தை தடுக்க…

வாகன டிரைவர்கள் அனைவருக்கும் முழு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆதுவும் லாரி டிரைவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். வெகுதூரம் செல்லும் லாரிகளில் இரண்டு டிரைவர்கள் இருப்பது நல்லது. அப்படி இல்லாத பட்சத்தில் இடையில் நன்றாக தூங்கி எழுந்து செல்ல வேண்டும். நான்கு வழிச்சாலையில் அதற்கு வசதி இருக்கிறது. எனவே டிரைவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு டபுள் டூட்டி பார்க்க கூடாது. அதோடு லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டு அதிபர்கள் இதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
அதோடு லாரியை குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாகவும் ஓட்டக்கூடாது.
இங்கே விபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து அதை மற்றவர்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.