April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிய தங்கச் சுரங்கம் கண்டு பிடிப்பு

1 min read


New gold mine in India

21/2/2020

இந்தியாவில் புதிய தங்கச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

தங்கம்

உலோகங்களில் பிளாட்டினம்தான் அதிக வலை மதிப்பு என்று சொன்னாலும் தங்கம் மீதுதான் மோகம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3981 ஆக விற்பனை ஆனது.
தங்கத்தின் விலை உயர்வு அதன் மீதான மோகம் என்பதும் ஒரு காரணம். இதனால் உலகம் முழுவதும் பலர் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். அதோடு தங்கம் நமது நாட்டில் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு கோலார் தங்க வயலில் தங்கம் எடுக்கப்பட்டது. தற்போது அங்கு போதுமான தங்கம் இல்லாததால் அந்தச் சுரங்கம் மூடப்பட்டு விட்டது. இதனால் இறக்குமதி தங்கம் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.

புதிய தங்கச்சுரங்கம்

இந்த நிலையில் இந்தியாவில் தங்கம் இருக்கும் இடம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு பூமிக்கு அடியும் புதைந்து இருக்கும் தங்கமானது நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச சுரங்கத்துறை இயக்குனரக அதிகாரி கே.கே.ராய் கூறியதாவது:-

சுமார் 20 ஆண்டுகள் சந்தேகத்தையடுத்து மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும்.

இந்த சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இணைய வழி ஏல நடவடிக்கைகளை கவனிக்க உள்ளனர்.

யுரேனியம்

அதுமட்டுமின்றி யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் உள்ளன .
இவ்வாறு அவர் கூறினார்.

கையிருப்பு அளவு

உலக தங்கக் கூட்டமைப்பின் படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம்தான் கையிருப்பில் உள்ளது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6 சதவீதமாகும்.

உலக நாடுகளிலேயே அமெரிக்காவிடம்தான் அதிகம் தங்கம் கையிருப்பில் உள்ளது. அங்கு 8,133.5 டன் தங்கம் இருக்கிறது. 2-வதாக ஜெர்மன் நாட்டில் 3,366 டன் தங்கமும், இத்தாலியில் 2,451.8 டன் தங்கமும், பிரான்சில் 2,436 டன் தங்கமும், ரஷியாவில் 2,241.9 டன் தங்கமும், சீனாவில் 1,948.3 டன் தங்கமும், சுவிட்சர்லாந்தில் 1,040 டன் தங்கமும் , ஜப்பானில் 765.2 தங்கமும் கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.