மது என நினைத்து சானிட்டசைரை குடித்தவர் பலி
1 min read
27.3.2020
கேரளாவில் சிறைக்கைதி ஒருவர் மது என நினைத்து கைகழுவும் சுத்திகரிப்பானை அருந்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறை ஒன்றில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம், கை கழுவுவதற்கு பயன்படும் சனிடைசர் உள்ளிட்டவற்றை கைதிகளை வைத்து சிறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இந்த சிறையில் பிப்ரவரி 18 முதல் ரிமாண்ட் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ராமன்குட்டி, என்பவர் கடந்த புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மயங்கி சரிந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில் கைகழுவும் சுத்திகரிப்பானில் ஆல்கஹால் வாசனை வருவதை உணர்ந்து விட்டு மது என நினைத்து ராமன் குட்டி என்ற கைதி கைகழுவும் சுத்திகரிப்பான் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, ஆல்கஹால் வாசனையை வைத்து மது என நினைத்து அருந்தியதால் தான் கைதி உயிரிழந்தார். அதில், ஐசோபுரோபில் ஆல்கஹால் உள்ளது . தற்போது இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.