கொரோனா பீதியால் நடிகை பிந்து மாதவி தனிமைப்படுத்தப்பட்டார்
1 min readActress Bindu Madhavi has been isolated due to Corona panic
31-5-2020
நடிகை பிந்து மாதவி குடியிருக்கும் பகுதியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பிந்துமாதவியும் தனிமைப்படுத்தப்பட்டார்.
கொரோனா
பரவி வரும் கொரோனா எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது. விவரம் அறிந்தவர்கள் அனைவரும் தங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்கிறார்கள்.
நடிகை பிந்து மாதவி கொரோனா பரவலால் தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டார். இவர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.
அதன்பின் மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார். தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைத்தனர். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.