சென்னையில் நாளை முதல் எவையெல்லாம் செயல்படலாம்- தமிழக அரசு விளக்கம்
1 min readTamil Nadu government will be able to function from tomorrow
31-5-2020
சென்னையில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் எவை எல்லாம் செயல்படலாம் என்பதை அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் ஊரடங்கு தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாட்டங்களி்ல் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்கு தளர்வுகள் அதிகம் இல்லை. இந்த மாவட்டங்களி் பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சென்னை பகுதியில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு நாளை (ஜூன் 1-ந் தேதி) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக தமிழக அரசு கூறியுள்ள விவரங்கள் வருமாறு:-
தகவல் தொழில்நுட்பம்
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
- அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்கவிக்க வேண்டும்
பெரிய கடைகள்
- வணிகவளாகங்கள் தவிர்த்து அனைத்து பெரிய கடைகள் (நகை, ஜவுளி) மற்றும் ஷோரூம்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் ஏசி இயக்கப்படக்கூடாது.
- மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8-ந் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். அங்கு ஏசி இயக்கக்கூடாது.
டீக்கடைகள்
- டீக்கடைகள், உணவு விடுதிகள்( ஜூன் 7 -ந் தேதி வரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.
- மத்திய அரசு உத்தரவுப்படி ஜூன் 8-ந் தேதி முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவு மட்டும் வாடிக்கையாளர் அமர்ந்து தேநீர் அருந்தலாம்.
வாடகை கார்
- வாடகை கார் மற்றும் டாக்சி வாகனங்களை, ஓட்டுனர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே மண்டலத்தற்குள் இ பாஸ் இன்றி பயன்படுத்தலாம்,
- ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது,
- சலூன்கள் மற்றும்அழகுநிலையங்களில் ஏசியை பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.