October 14, 2024

Seithi Saral

Tamil News Channel

மகளின் படிப்புக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுதத சலூன் கடைக்காரர்- பிரதமர் பாராட்டு

1 min read


Saloon shopkeeper paid Rs 5 lakh to por people for his daughter’s study – praises the Prime Minister

31-5-2020

ஊரங்கு காலத்தில் மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் தன் மகள் படிப்புக்கு வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை எழைகளுக்கு கொடுத்து உதவினார். அவரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

சலூன் கடைக்காரர்

இந்த மே மாத தொடக்கத்தில் மதுரையில் சில இடங்களில் கொரோனா அதிக அளவில் பரவி இருந்தது. இதனால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலமடை பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஏழை மக்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது அவர்கள் மீது அந்தப்பகுதியைச் சேர்ந்த சிறுமி நேத்ராவுக்கு இரக்கம் ஏற்பட்டது. அவரது தந்தை மோகன் அந்தப் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கிறார். ஊரடங்கால் அவரது கடையும் மூடப்பட்டது. அவருக்கும் வருமானம் இல்லை.
ஆனால் நேத்ரா தனது தந்தையிடம் சென்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்று கோரினார். அதற்கு மோகன் நம்மிம் பணம் ஏதும் இல்லையே என்றார். உடனே நேத்ரா எனது படிப்புக்காவும், என் எதிர் காலத்திற்காகவும் ரூ.5 லட்சம் சேர்த்து வைத்திருக்கிறீர்களே… அந்தப் பணத்தின் மூலம் ஏழைகளுக்கு உதவுவோம் என்கிறார். அந்தப் பணமா? என்று தந்தை சந்தேகக்குரல் எழுப்ப.. அவசரத்திற்கு உதவாத பணம் இருந்து எதுக்கு என்றார்.

இதனால் அந்த சிறுமியின் தாய் தந்தையின் மனம் மாறியது.

உதவி

ஒரு குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்பு வழங்க திட்டமிட்டனர். பின்னர் மதுரை மாநகர உதவி ஆணையர் லில்லி கிரேசி தலைமையில் பல ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சொந்த செலவில் வாங்கி உதவி செய்தனர்.

மோடி பாராட்டு

இந்த சேவை டெல்லியில் பிரமதர்மோடியின் காதுக்கு எட்டியது. அவர் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இந்த சேவையை நினைவுகூர்ந்து பாராட்டினார்.

அவர் பேசும்போது, மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர், தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக செலவிட்டார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிட்ட அவருக்கு பாராட்டுக்கள் என்று புகழ்ந்தார்.

மோகன் பேட்டி

பிரதமர் மோடியின் பாராட்டு பற்றி சலூன்கடைக்காரர் மோகன் கூறியதாவது:-

நான் சலூன்கடை வைத்து தொழில் செய்துவரும் ஒரு சாதரண மனிதன். எனது இந்த சிறிய சேவையை கவனித்து நாட்டின் பிரதமரே பாராட்டியது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

அனைத்து அரசியல் கட்சியினர், உள்ளூர் மக்களும் நேரிலும், தொலைபேசியும் வாழ்த்து தெரிவித்தபடி உள்ளனர். இவ்வுளவு பெரிய பாராட்டும், பெருமையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நான் அந்த உதவியை செய்யவில்லை. பிரதமரே பாராட்டுவார் என்றும் நான் நினைக்கவில்லை.

என் கடைக்கு மிகச் சாதாரண அடித்தட்டு மக்கள்தான் வருவார்கள். அவர்கள் ஊரடங்கால் வேலைக்கு போக முடியாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டனர். அதைப்பார்த்து என் மகள், அவள் படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து உதவி செய்யுங்கள், படிப்பிற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். அவள் அப்படி சொன்னதும் முதலில் நானும், என் மனைவியும் தயங்கினோம். அந்தப் பணத்தை எடுக்க கூடாது என்று கூறிவிட்டோம். ஆனால் அவள் அன்று முழுவதும் சாப்பிடாமல் அடம்பிடித்தாள். அதன்பின்னர்தான் எங்கள் மகளின் மனிதநேயம் எங்கள் மனதை கரைத்தது. உடனே நாங்கள் அந்தப் பணத்தை எடுத்து வந்து மகள் விருப்பப்படியே அந்த கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவினோம். பிரதமரின் இந்தப் பாராட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பாராட்டு எல்லாம் என் மகளைதான் சாரும்.

இதுபோல் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய என் மகள் நேத்ரா ஐஏஎஸ் படித்து கலெக்டராக ஆசைப்படுகிறாள். அவள் ஆசைப்படி படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். அதற்கு அவளை எப்படியாக பிரதமரிடம் அழைத்துச் சென்று அவரிடம் அவள் ஆசி பெற என்று ஆசை. அது நடக்குமா? என்று தெரியவில்லை.
இவ்வாறு மோகன் கூறினார்.

நேத்ரா பேட்டி

தந்தையை உதவி செய்ய தூண்டிய நேத்ரா கூறியதாவது:-
அப்பா ஒரளவு சம்பாதிப்பார். இதனால் எங்களுக்கு சாப்பாட்டிற்கு கஷ்டமில்லை. ஆனால், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் வீடு தேடி வந்து சாப்பாட்டிற்கே வழியில்லை என்று வாய்விட்டு சொன்னார்கள். அப்பாவிடம் அவங்களுக்கு முடிந்தளவு உதவியை செய்யுங்கள் என்றேன்.

மிகச் சாதாரணமாக அந்த உதவியை செய்தோம். ஆனால், நாங்கள் செய்த இந்த உதவியால் கிடைத்த பாராட்டுகளை பார்க்கும்போது வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற சேவையை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நேத்ரா கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், மதுரையைச் சேர்ந்த அருள்மொழி என்ற பெண் சுயமாக தொழில் செய்து முன்னேற்றம் அடைந்ததை பிரதமர் மோடி பாராட்டினார். அதோடு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பூமி பூஜை விழாவுக்கு வந்தபோது அருள்மொழியை நேரடியாக மேடைக்கு அழைத்து பாராட்டினார்.

அதபோல் இப்போது பிரதமர் மோடி சலூன் கடைக்காரர் மோகனை பாராட்டியுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவர் மதுரையைச் சேர்ந்த சமூக நல சேவை செய்த சின்னப்பிள்ளை என்ற பெண்ணை அழைத்து பாராட்டி அவரது காலில் விழுந்தார் என்பது நினைவில் இருக்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.