June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

1 min read

he number of deaths caused by coronavirus in India has exceeded 6 thousand

4-5-2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா

இந்தியாவில் இன்னும் கொரோனா கட்டுப்பாட்டக்குள் வரவில்லை. நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல் வருமாறு:-

இன்று (வியாழக்கிழமை ) காலை 9:15 மணி நிலவரப்படி, கடந்த ஒரு நாளில் இந்தியாவில் 9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,16 ,919 ஆக அதிகரித்துள்ளது.

260 பேர் சாவு
அதேபோல் இந்தியாவில் ஒரே நாளில் 260 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக் பலியானவர்களின் எண்ணிக்கையும் 6,075 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,06,737 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட தவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மாநிலம் வாரியாக…

கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-

மராட்டியம் – 74,860 (2,587)

தமிழ்நாடு – 25,872 (208)

டெல்லி – 23,645(606)

குஜராத் – 18,100(1,122)

ராஜஸ்தான் – 9,652 ( 209)

உத்தர பிரதேசம் – 8,729 ( 229)

மத்திய பிரதேசம் – 8,588 ( 371)

மேற்கு வங்காளம் – 6,508(345)

பீகார் – 4.390(25)

ஆந்திரா – 4,080 (68)

கர்நாடகம்- 4,063 (53)

தெலுங்கானா – 3,020 (99)

அரியானா – 2,954 ( 23)

காஷ்மீர் – 2,857 (34)

ஒடிசா- 2.388(7)

பஞ்சாப்- 2,376(47)

அசாம் – 1,672(4)

கேரளா – 1,494 (11)

உத்தரகாண்ட் – 1,085(8)

ஜார்க்கண்ட்-752 (5)

சத்தீஸ்கர்-668 (2)

திரிபுரா-468(0)

இமாச்சல பிரதேசம் -359 (5)

சண்டிகர் -301(5)

மணிப்பூர்-118(0)

லடாக்-90(1)

புதுச்சேரி- 82 (0)
கோவா-79(0)
நாகலாந்து-58(0)
அருணாச்சல பிரதேசம்-38(0)
அந்தமான-33(0)
மேகாலயா-33(1)
மிஜோரம்-14(0)
தாதர் மற்றும்நாகர் ஹவேலி-8(0)
சிக்கிம்-2(0)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *