கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம்- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
1 min read
Hydroxychloroquine can be used for corona- World Health Organization
4-5-2020
கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து ஏதும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனாலும் கொரோனா காய்ச்சலுக்கு மலேரியாவுக்கு கொடுக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொடுக்கிறார்கள். சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த மாத்திரை இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து இந்த மருத்தை வாங்கி பயன்படுத்துகின்றன.
உலக சுகாதார அமைப்பு
இந்த நிலையில் கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு இந்த மருந்து பாதுகாப்பானது அல்ல என்றும் அதை பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் வாய்ப்பு உள்ளது எனவும் கூறியது. அதோடு இந்த மருந்தின் பயன்பாட்டை திடீரென நிறுத்தி வைப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி அறிவித்தார்.
ஆனால் இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நோய் தொற்று பாதுகாப்பு கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த மருந்தை பயன்படுத்தியதால் உயிரிழப்புகள் எதுவுமில்லை என்ற ஆய்வுத்தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஹைட்ராக்ஸி குரோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் பரிந்துரைக்கப்பட்டுளளது.” என்று கூறியுள்ளது.