May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் ஒரு மாதத்திற்கு பின் கொரோனா பாதிப்பு 1,200க்கு கீழ் குறைந்தது

1 min read


After a month in Chennai, Corona’s impact fell to 1,200

11-7-2020

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பின் சென்னையில் கொரோனா பாதிப்பு 1,200க்கும் கீழ் குறைந்தது.

கொரோனா

தமிழகத்தில் இன்று ( சனிக்கிழமை) மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,30,261லிருந்து 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 81,992 ஆண்கள், 52,212 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46,410 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் 1,185 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 74,951 லிருந்து 76,158ஆக அதிகரித்துள்ளது.

குறைந்தது

கடந்த ஒரு மாதத்திற்கு பின் சென்னையில் கொரோனா பாதிப்பு 1,200க்கும் கீழ் குறைந்தது. சென்னையில் 8-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,591 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324லிருந்து 85,951 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 69 பேர் இறந்துள்ளனர். இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் 51 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 18 பேரும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை (வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உள்பட):-
அரியலூர் – 12

செங்கல்பட்டு – 237

சென்னை – 1,185

கோவை – 71

கடலூர் – 17

தர்மபுரி – 14

திண்டுக்கல் – 5

ஈரோடு – 42

கள்ளக்குறிச்சி – 102

காஞ்சிபுரம் – 119

கன்னியாகுமரி – 133

கரூர் – 6

கிருஷ்ணகிரி – 15

மதுரை – 277

நாகை – 6

நாமக்கல் – 12

நீலகிரி – 1

பெரம்பலூர் – 2

புதுக்கோட்டை – 36

ராமநாதபுரம் – 81

ராணிப்பேட்டை – 50

சேலம் – 136

சிவகங்கை – 67

தென்காசி – 65

தஞ்சாவூர் – 27

தேனி – 119

திருப்பத்தூர் – 12

திருவள்ளூர் – 346

திருவண்ணாமலை – 64

திருவாரூர் – 13

தூத்துக்குடி – 175

திருநெல்வேலி – 80

திருப்பூர் – 6

திருச்சி – 128

வேலூர் – 135

விழுப்புரம் – 44

விருதுநகர் – 94

விமானநிலைய தனிமைப்படுத்தல்வெளிநாடு – 27

உள்நாடு – 4

ரெயில்நிலைய கண்காணிப்பு – 0
மொத்தம் – 3,965

குணம் அடைந்தவர்கள் விவரம்

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

அரியலூர் – 0
செங்கல்பட்டு – 2
சென்னை – 1791
கோவை – 1
கடலூர் – 42
தர்மபுரி – 11
திண்டுக்கல் – 56
ஈரோடு – 75
கள்ளக்குறிச்சி – 148
காஞ்சிபுரம் – 33
கன்னியாகுமரி – 49
கரூர் – 8
கிருஷ்ணகிரி – 0
மதுரை – 553
நாகை – 2
நாமக்கல் – 57
நீலகிரி – 15
பெரம்பலூர் – 0
புதுக்கோட்டை – 132
ராமநாதபுரம் – 42
ராணிப்பேட்டை – 12
சேலம் – 36
சிவகங்கை – 47
தென்காசி – 0
தஞ்சாவூர் – 14
தேனி – 48
திருப்பத்தூர் – 22
திருவள்ளூர் – 138
திருவண்ணாமலை – 35
திருவாரூர் – 13
தூத்துக்குடி – 16
திருநெல்வேலி – 39
திருப்பூர் – 11
திருச்சி – 53
வேலூர் – 52
விழுப்புரம் – 38
விருதுநகர் – 43
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 8
உள்நாடு – 3
ரெயில் நிலைய கண்காணிப்பு – 1

மொத்தம் – 3,591

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.