April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்-13 / நாடகம் / கடையம் பாலன்

1 min read

Amuthavin Asaikal-13 / Drma by Kadayam Balan

காட்சி 13
இடம்-பூங்கா

பங்குபெறுவோர்- விமலா, ராஜேஷ்


ராஜேஷ்: விமலா நாம நினைச்சது நடந்து விட்டது. இனிமே அடுத்த காயை நகர்த்த வேண்டியதுதான்.
விமலா: என்னங்க சாதிச்சிட்டிங்க.
ராஜேஷ்: நான் ஏற்கனவே சொன்னபடி அசோக்குமார் வீட்டில் பிரச்சினைய உண்டுபண்ணி அவங்கள பிரிச்சிட்டேன்.
விமலா: என்ன அசோக்குமாரும் அமுதாவும் பிரிஞ்சிட்டாங்களா?
ராஜேஷ்: ஆமா இரண்டு பேருக்கும் கடுமையான சண்டை. கடைசியில அசோக்குமார் வீட்டைவிட்டு வெளியே போயிட்டாரு. நாம பள்ளிக்கூடத்தில ஒரு கதை படிச்சிருப்போமே.
விமலா: என்னகதை?
ராஜேஷ்: காட்டில எருதுகள் ஒற்றுமையாக மேயந்து கொண்டிருந்தபோது சிங்கத்தால அடித்து திங்க முடியல. இதனால் அந்த சிங்கம் நரியின் உதவி நாடியது. நரி அந்த எருதுகளிடம் சென்று புற்கள் இருக்கும் இடத்தில தனித்தனியா மேய்ந்தால் வயிறு நிறையும்ன்னு சொல்லிச்சி. எருதுகள் அதை உண்மைன்னு நினைச்சி தனித்தனியா மேய்ந்தது. அதன்பிறகு சிங்கம் தனியாக நின்ற எருதுகளை ஒவ்வொன்றாக அடித்து கொன்னுது.
விமலா: ஓ அதுமாதிரி அவங்க வீட்டு சொத்து பணத்தை பறிக்க அவங்களை பிரிச்சிங்களாக்கும்.
ராஜேஷ்: ஆமா பவித்ரா… இப்போதான் உன்னுடைய வேலை தேவைப்படுது.
விமலா: நான் என்ன செய்யணும்?
ராஜேஷ்: தனியா பிரிஞ்ச அமுதாவை மயக்கி அவளிடம் உள்ள சொத்தை நான் பறிச்சிடுவேன். அவளுடைய சொத்தை மட்டும் அல்ல. அவளோடு தங்கச்சி சொத்தும் நம்ம கைக்கு கிடைச்சிடும்.
விமலா: நானும் உங்ககூட வந்து அவங்களை ஏமாத்தணுமா? இல்லைன்னா அமுதாவோடு தங்கை பவித்ராவை ஏமாத்தி ஏதாவது பண்ணணுமா?
ராஜேஷ்: இல்லை இல்லை. நீ தனியா பிரிஞ்சி வாழ்ற அசோக்குமாரை போய் பார்க்கணும். அவனுடன் பழகி அவனை நீ சொல்றபடி கேட்க வைக்கணும். அதன்பிறகு அவன் சொத்தையும் படிப்படியாக பறிக்கணும். இதுதான் உன்வேலை.
விமலா: சரி… அசோக்குமார் இருக்கிற இடத்துக்கு போறேன் அங்கே என் கைவரிசையை காட்டுறேன்.
ராஜேஷ்: பை த பை… ஒண்ணு முக்கியம் விமலா…. எந்த காரணத்தைக் கொண்டும் நாம ரெண்டு பேரும் பழகுறத சொல்லிடாதே.
விமலா: சரிங்க நான் யாரோ நீங்க யாரோன்னு நடிக்கிறேன்.
ராஜேஷ்: அது மட்டுமல்ல… நான் உனக்க விரோதியாவே காட்டிக்கணும். ஏன்னா நான்தான் அமுதாவை ஏமாத்திட்டு வர்றேன்னு அசோக்குமாருக்கு தெரியும். அதனால் என்மேல அசோக்குமார் கடுமையான கோபத்தில இருக்கான்.
விமலா: அப்படினா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் உங்களை திட்டணும்.
ராஜேஷ்: இன்னொண்ணு முக்கியம். நாம இனிமே யாருக்கும் தெரியாம தனியாத்தான் சந்திக்கணும். நீ செல்போன்ல உள்ள என் நம்பரை அழிச்சிடு. நம்பரை மனசுல வைச்சுக்க…
விமலா: சரிங்க.
ராஜேஷ்: ஏதாவது முக்கியமான விஷயம்ன்னா நம்ம கைசூப்பி கைலாசத்திட்ட சொல்லி அனுப்பு. அவன் நம்ம ஆளு.
விமலா: ஓ.கே.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.