April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள் / நாடகம் / கடையம் பாலன்

1 min read

Amuthavin Aasaikal / Drama by Kadayam Balan

காட்சி 14
இடம்: அசோக்குமார் வீடு

பங்கேற்பவர்கள்- அமுதா, பவித்ரா, ராஜேஷ், கைசூப்பி கைலாசம்

பவித்ரா: என்ன அக்கா உண்மையிலே அத்தான் கோவிச்சிக்கிட்டு போயிட்டாரா?
அமுதா: ஆமா டி அவரு இங்க வராம இருக்கிறது நல்லது. நம்மக்கூட இருந்தா நம்மள முன்னேற விடமாட்டாரு.
பவித்ரா: நான் இன்னிக்கு காலேஜ் போயிடுவேன். அதுக்கு அப்புறம் உனக்கு யாரு ஹெல்ப் பண்ணுவா.
அமுதா: எனக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை.
பவித்ரா: நாம லேடிக்கா. வெளியில ஏதாவது வேலைன்னா உன்னால எப்படி முடியும்? அதனால ஆனந்தை வேண்டுமானா அடிக்கடி இங்க வந்து பார்க்கச் சொல்லட்டுமா?
அமுதா: வேண்டாம். அப்படின்னா எனக்கு உதவி பண்ண ராஜேஷ் இருக்காரு. சின்னச்சின்ன வேலைங்க செய்ய அந்த கைசூப்பி கைலாசம் இருக்கான்.
பவித்ரா: சரி அக்கா நான் கிளம்புறேன்.
அமுதா: ஐயோ நான் மறந்துட்டேன். பங்கு மார்க்கெட்ல சேர பணம் தேவைபடுதுல்ல. அதுக்கு நம்ம சொத்த பேங்க்ல காட்டி பணம் வாங்கலாம்ன்னு ராஜேஷ் சொன்னாரு.
பவித்ரா: சரியக்கா வாங்கிக்கோ.
அமுதா: அதுக்கு நம்ம சொத்து பவர்பட்டாவை அவரு பேருக்கு எழுதி கொடுக்கணுமாம்.
பவித்ரா: பவர்பட்டாவா. அக்கா தெரியாத ஆளுங்கக்கிட்ட சொத்து பவர் எதையும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.
அமுதா: அவரு என்ன நமக்கு தெரியாதவரா? நாம முன்னேறணும்ன்னு நினைக்கிற ஒரு நல்ல மனுஷன்.
பவித்ரா: சரி அப்ப கொடுத்திடு.
அமுதா: நம்ம வீடு சொத்து இரண்டு பேரு பேரிலத்தானே இருக்கு. அதனால நீயும் கையெழுத்துப் போடணும்.
பவித்ரா: சரிக்கா நான் போடுதேன்.
(ஒரு பாமில் கையெழுத்துப்போடுகிறாள். பின்னர் தோள்பையை தூக்கிக்கொண்டு புறப்படுகிறாள்)
அமுதா: பத்திரமா போம்மா. துணைக்கு அந்த தம்பி வருதா.
பவித்ரா: அவரு வரவில்லை. ஏதாவது அவசரம்ன்னா போன்பண்ணி வரச் சொல்லிடுவேன்.
பை…
(பவித்ரா சென்றபின்…)
அமுதா: பவர் பட்டாவை ரெடி பண்ணியாச்சி. இனிமே அதை வச்சி பணத்தை புரட்டிடலாம்.
ராஜேஷ்: (வந்தபடி…) என்ன அமுதா இப்பத்தான் உங்க முகத்தில புதுப்பொலிவை பார்க்க முடியுது.
அமுதா: ஆமா ராஜேஷ் இப்பத்தான் நான் பிரியா இருக்கேன். அப்பப்பா… இவ்வளவு நாளும் அவரு என்ன பாடுபடுத்தினாரு.
ராஜேஷ்: அசோக்குமார் இங்கே வருவாரா?
அமுதா: வரமாட்டார். ஏன் கேட்கிறீங்க.
ராஜேஷ்: நீங்களும் அவரும் பிரியணும்ன்னு நான் நினைக்கல. ஆனா அவரு வந்து உங்க திட்டத்தை கெடுத்துடுவாரோன்னுதான் பயமாக இருக்கு.
அமுதா: ராஜேஷ் கவலைப்படாதீங்க. அவரு வரமாட்டாரு. வந்தாலும் அவரை சேர்க்க மாட்டேன். நான் ஒரு நல்ல நிலைமையில வந்தப் பிறகுதான் அவரை சேர்ப்பேன். அப்பவும் அவரு தான் செஞ்ச தப்ப நினைச்சி வருத்தப்படணும்.
ராஜேஷ்: சரி அமுதா பவர்பட்டாவுக்கு ஏற்பாடு செய்திட்டீங்களா?
அமுதா: எல்லாம் செய்துட்டேன். என் தங்கச்சிக்கிட்ட கூட கையெழுத்து வாங்கிட்டேன்.
(பாரத்தை ராஜேஷிடம் கொடுக்கிறாள்)
ராஜேஷ்: அப்புறம் அமுதா உங்களுக்கு எந்த பெர்ஷனல் உதவினாலும் எங்கிட்ட கேளுங்க. சின்னச்சின்ன எடுபிடி வேலைக்கு நம்ம கைசூப்பி கணேசனை வச்சிக்கிடுங்க.
டேய்… கைலாசம்… கைலாசம்.
கைசூப்பி கைலாசம்: (வந்தபடி) அண்ணே என்ன அண்ணேன் செய்யணும்.
ராஜேஷ்: இவங்களுக்கு என்ன வேலைன்னாலும் செஞ்சி கொடு. கடைக்கு போய் வேண்டிய சாமான்களை வாங்கி கொடு.
கைசூப்பி கைலாசம்: அமுதா அக்கா எங்கிட்ட என்ன வேலைன்னாலும் சொல்லுங்க. நான் நல்லா வேலை செஞ்சாத்தான் அண்ணன் எனக்கு விமலாவை கட்டி வைப்பாரு.
அமுதா: சரிப்பா… எனக்கு வேணடிய வேலைய செய். ஆனா கையை மட்டும் சுத்தமா கழுவிட்டு வாப்பா.
கைலாசம்: என்னக்கா என்னை பத்தி யாரோ உங்கக்கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க.. நான் ஒரு நாளும் கைய வாயில வைக்க மாட்டேன்.
(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.