June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

“புதுச்சேரியில் ஆளும் காங். கூட்டணி சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும்” – அ.தி.மு.க.கோரிக்கை

1 min read
"Ruling Congress in Puducherry to demonstrate strength in coalition" - AIADMK

12-7-2020

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளதாகவும் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி

புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த நாராயணசாமி முதல்-அமைச்சராக இருக்கிறார்.
இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
  புதுவை யில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி பலவீனமாக உள்ளது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசின் மீது பல்வேறு அதிருப்தி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

நிரூபிக்க வேண்டும்

எனவே துணைநிலை ஆளுநர் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி பெரும்பான்னையை நிரூபிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *