தமிழகத்தில் 6,008 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டனர்
1 min read
In Tamil Nadu, 6,008 people were released from the corona
31-8-2020
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 6,008 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரேனாா நிலவரம் பற்றிய விவரங்களை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) மட்டும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 5,925 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 31 பேர் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 150 ஆய்வகங்களில் இன்று மட்டும் 75,100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 48 லட்சத்து 13 ஆயிரத்து 147 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,533 பேர் ஆண்கள். 2,423 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,58,370. பெண்களின் எண்ணிக்கை 1,69,642. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 .
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று( திங்கட்கிழமை) மட்டும் 6,008 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 ஆக உள்ளது.
99 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 91 பேர் இறந்தனர். இதில் 56 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 35 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 52,364 பேர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 19 ஆயிரத்து 748 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 674 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 55 ஆயிரத்து 619 பே.
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,35,597 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர கோவையில் 589 பேருக்கும், சேலத்தில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 347 பேருக்கும், கடலூரில் 307 பேருக்கும், திருவள்ளூரில் 299 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 187 பேருக்கும், விழுப்புரத்தில் 176 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 196 பேருக்கும், தென்காசியில் 94 பேருக்கும், தூத்துக்குடியில் 111 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் 19 பேரும், கோவையில் 14 பேரும், காஞ்சிபுரம், வேலூரில் தலா 8 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், திருவண்ணாமலையில் 5 பேரும், புதுக்கோட்டையில் 4 பேரும், சேலத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், ஈரோடு, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகரில் தலா ஒருவரும் என 91 பேர் இன்று இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று சென்னையில் 1,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,626 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 436 பேரும், சேலத்தில் 390 பேரும், கடலூரில் 278 பேரும், திருவள்ளூரில் 277 பேரும், கன்னியாகுமரியில் 261 பேரும், காஞ்சிபுரத்தில் 259 பேரும், செங்கல்பட்டில் 208 பேரும், ராணிப்பேட்டையில் 199 பேரும், விழுப்புரத்தில் 186 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.