நெல்லை அரசு மருத்துவமனையில் வாலிபர் பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய இளம்பெண்
1 min read1.9.2020
The teenager pretended to have been raped by a teenager at a government hospitalவிருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரை சேர்ந்த 46 வயது பெண் ஒருவருக்கு சிறுநீரக கல் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக அவரது 17 வயது மகளும் உடனிருந்தார். சிறிது நாட்களில் குணமடைந்ததும் அப்பெண் தனது மகளை அழைத்துக்கொண்டு வில்லிபுத்தூருக்கு சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் சரிவர சாப்பிடாமல் வாந்தி எடுத்தார். அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதற்கு யார் காரணம் என கேட்டனர்.
அப்போது, நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்த போது அதே வார்ட்டில் உறவினருக்கு உதவியாக இருந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும், அந்த வாலிபர் குறித்த முழு விபரம் தெரியவில்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து வில்லிபுத்தூரிலிருந்து பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் பெண் போலீசார் நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களில் பக்கத்து பெட்டில் சிகிச்சை பெற்றவர்களின் விபரங்களை சேகரித்தனர். அதில் சம்பந்தப்பட்ட பெண் கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் கல் அடைப்புக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி நான்கு மாதங்களே ஆகியுள்ளது. அப்படியிருக்கையில் இளம்பெண் எப்படி 6 மாதம் கர்ப்பமாக இருக்கு முடியும் என போலீசார், இளம்பெண்ணிடம் விசாரித்தனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இளம்பெண், தன்னுடைய பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபரை காதலிப்பதாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் தான் கர்ப்பமானதாகவும், அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோரிடம் அதை மறைத்து பொய் கூறியதாகவும் தெரிவித்தார். இதனையத்து இளம்பெண்ணின் பெற்றோரை அழைத்து, ராஜபாளையத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.