எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையா?
1 min read
Lung transplant surgery for SP Balasubramaniam?
8-9-2020
கொரோனா பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர்காக்கும் கருவிகள் கொண்டு தொடர்ந்து ஐசியு.வில் சிகிச்சை பெற்று வருகிறார். பிஸியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன் தனது திருமண நாளை மனைவி உடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஐபேடில் கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருகிறது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.
நுரையீரல்
இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை முதல் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் செய்திகள் பரவி வருகின்றன.
இதுப்பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது அந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்தனர்.