எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை எப்படி இருக்கிறது; மகன் சரண் விளக்கம்
1 min read
How is the physical condition of SP Balasubramaniam; Son Charan Description
17-9-2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணித்தின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அவரது மகன் சரண் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கடந்த மாதம் (ஆகஸ்டு ) 5-ந் தேதி சென்னையில் எம்.ஜி.எம். ஹெல்த் கேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சைக்குப்பிறது அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறினார்கள்.
அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகின்றன.
கொரோனாவில் இருந்து அவர் மீண்டாலும் நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் தீவிர சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.
மகன் விளக்கம்
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து அவரது மகன் சரண் நேற்று( புதன்கிழமை) சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ‘பிசியோதெரபி’ தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தாலும் உடல்நிலை சீராகி வருவதால் அது நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என்ற நம்பிக்கை உள்ளது.
மருத்துவ குழுவினருக்கும் அப்பா குணமடைய பிரார்த்தனை செய்துவரும் நலம் விரும்பிகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு சரண் கூறியுள்ளார்.