June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

உடல் நலம் பாதிக்கப்பட்ட ரசிகருக்காக ஆடியோவில் பேசிய ரஜினிகாந்த்

1 min read

Rajinikanth speaks on audio for a health-affected fan

16-9-2020

உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தனது ரசிகருக்கு ஆறுதல் கூறி நடிகர் ரஜினிகாந்த் ஆடியோவில் பேசி அனுப்பி உள்ளார்.

ரஜினி ரசிகர்

மதுரையைச் சேர்ந்தவர் முரளி. இவர் தீவிர ரஜினி ரசிகர் . ரஜினிகாந்த் மன்றத்தை முதலில் தொடங்கியது இவர்தான் என்று கூறப்படுகிறது.
முரளி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து இன்று ரஜினிகாந்த் ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-

பிரார்த்திக்கிறேன்

முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது கன்னா. இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுங்க. வீட்டுக்கு வந்த பிறகு குடும்பத்தோடு எனது வீட்டுக்கு வாங்க. தைரியமாக இருங்க. வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினிகாந்த் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *