எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார்-மகன் தகவல்
1 min readSP Balasubramaniam is eager to return home
23-/9/2020
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் சரண் கூறினார்.
கொரோனா
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிமணியம் தீவிர சிகிச்சையின் காரணமாக உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. கடந்த வாரம் அவர் உணவு சாப்பிட்டதாக அவரது மகன் சரண் கூறினார்.
இந்த நிலையில் நேற்று ( செவ்வாய்க்கிழமை) சரண் சமூக வலைதளத்தில் தனது தந்தை உடல்நிலை பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அவர் கூறியிருப்பதாவது:-
வீடு திரும்ப ஆசை
அப்பாவின் உடல் நிலை சீராக இருக்கிறது. தற்போது நல்ல முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறது. அவருக்கு, ‘எக்மோ’ மற்றும், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து வருகிறது.
‘பிசியோதெரபி’யும் அளிக்கப்பட்டு வருகிறது. திரவ உணவு எடுத்துக் கொள்கிறார். விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக இருக்கிறார்.
இவ்வாறு சரண் கூறியுள்ளார்.