June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

போதைப் பொருள் வழக்கில் இருந்து தப்பிக்க அரசியல் தலைவர்களை நாடிய நடிகை

1 min read

Actress Anusri who sought political leaders to escape drug case

3/10/2020

நடிகை அனுஸ்ரீ போதைப்பொருள் வழக்கில் இருந்து தப்பிக்க அரசியல் தலைவர்கள் உதவியை நாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட நடிகை

கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இருந்து தப்பிக்க, நடிகை அனுஸ்ரீ அரசியல் தலைவர்கள் உதவியை நாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதை பொருள் சப்ளையர் கிஷோர் ஷெட்டி, தருண் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டதால், நடிகையும், தயாரிப்பாளருமான அனுஸ்ரீ, விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்த போலீசார், சம்மன் அனுப்பப்பட்ட பிறகு 3 மிகமுக்கியமான அரசியல் பிரமுகர்களோடு அவர் தொடர்பில் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

தொடர் விசாரணையில் இருந்து தப்பிக்க நடிகை அனுஸ்ரீ அந்த அரசியல் பிரமுகர்களின் உதவியை நாடியிருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *