தங்க கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா சுரேசை தெரியும் என்கிறார் கேரள முதல்வர்
1 min read
Kerala Chief Minister says he knows Swapna Suresh who was caught in gold smuggling
14/10/2020
தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேசை தனக்குத் தெரியும் என்று, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ்
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கில், தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முதல்-மந்திரிக்குத் தெரிந்துதான், ஸ்வப்னாவுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டதென குறிப்பிட்டிருந்தது. இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேட்டி
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பினராயி விஜயன், “ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் என்னை பல முறை சந்திக்க வந்துள்ளார். அப்போதெல்லலாம் அவருடன் ஸ்வப்னா சுரேஷ் வந்தார். முதல்வரை தூதர் ஒருவர் அடிக்கடி சந்திப்பது வாடிக்கைதான். ஆனால், சிவசங்கருக்கும் ஸ்வப்னாவுக்குமான உறவு பற்றி எனக்குத்தெரியாது.
இவ்வாறு பிரனாயி விஜயன் கூறினார்.