ஆசிரியர் ஆதிநாராயணன் அரும்பணியும் தோரணமலையின் வளர்ச்சியும்
1 min readAdinarayanan worked and the development of Thoranamalai
25/10/2020
(இன்று ஆதிநாராயணன் அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி இதை வெளியிடுகிறோம்.)
தென்காசி&கடையம் சாலையில் மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை வனப்பில் அமைந்ததுதான் தோரணமலை. இங்கு முருகப்பெருமான் பாறை குகைக்குள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார்.
ஒருகாலத்தில் சுற்றுவட்டார பகுதியினருக்கு மட்டுமே தெரிந்த இந்த கோவிலை இன்று நாடுமுழுவதும் அறியவைத்த பெருமை ஆசிரியர் ஆதிநாராயணன் அவர்களையே சாரும்
எளிதில் நடந்துகூட செல்லமுடியாத நிலையில் இருந்த இந்த மலைக்கு விரைவாக சென்று வர வழிவகுத்ததும் அந்த ஆசிரியர்தான்.
தென்காசி&கடையம் சாலையில் இருந்து மலை அடிவாரத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இன்று தடையின்றி செல்ல அழகான தார்சாலை வசதி.
இதற்கெல்லாம் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் ஆதிநாராளயணன் அவர்கள் சந்தித்து இதற்கான எற்பாடுகளை செய்ததார்.
கோவிலை பிரபலபடுத்த சினிமா தியேட்டர்களில் சிலேடு போட ஏற்பாடு செய்தார். தோரணமலையின் பெருமைகளை நாடுறிய விளம்பரப்படுத்தினார்.
இதற்கெல்லாம் அவர் பள்ளிக்கூடம் முடிந்தபிறகு தனது சைக்கிளிலேயே பயணம் செய்வார்.
கற்களையும் முட்புதர்களையும் கடந்துதான் அன்று மலைமீதுள்ள முருகப்பெருமானை தரிசிக்க முடியும். ஆனால் இன்று எளிதாக செல்ல படிக்கட்டுகள். முதியர்களுக்காக கைப்பிடி வசதி. மலைப்பாதைகள் ஆங்காங்கே இளைப்பாற மண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதற்காக அவர்பட்ட பாடு கொஞ்சம்நஞ்சம் அல்ல. பலரை சந்தித்து பொருளுதவி பெற்றார். பலர் செங்கற்களையும், சிமெண்டு மூட்டைகளையும் காணிக்கையாக பெற்றார்.
ஆரம்பத்தில் அடிவாரத்தில் வல்லப விநாயகர் சன்னதி, மலையில் முருகனுக்கு குகை கோவில், பத்திரகாளியம்மனுக்கு தனி சன்னதி மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அடிவாரத்தில் முருகன், சிவன், லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரக சிலைகள் மற்றும் வள்ளி&தெய்வானையும் முருகப்பெருமானின் உற்சவர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
லட்சுமி தீர்த்தச் சுனை புனரமைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குடிநீர் வசதி, குறையறை வசதி, கழிவறைவசதி, செய்யப்பட்டு உள்ளன. தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கடைசி வெள்ளி, வைகாசி விசாகம், தைப்பூசம் மற்றும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைக்க ஏற்பாடு செய்தார்.
விழாக்களின்போது பக்தர்கள் விடியவிடிய தங்கி இருக்க சினிமாபோட போடவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் வழிவகை செய்தார்.
இத்தனை வசதிகள் உருவாவதற்கு காரணகர்த்தா ஆதிநாராயணன் அவர்கள் சாதாரண தொடங்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவர்தான்.
இவர் 1965 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரியரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். கடையம் சுற்று வட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோவிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார்.
ஆதிநாராயணன் அவர்கள் விரிவான திப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்குள் அவர் இறைவனுடன் ஐக்கியமானார்.
ஆனாலும் அவர் நினைத்த பணியை அவரது மகன் செண்பகராமன் எடுத்து நடத்துகிறார்கள். திருப்பணியின்போது கோவிலை மேம்படுத்த முடிவு செய்யப்பட்ட உள்ளது.
பொதுவாக திருப்பணியை தனியருவரால் செய்துவிட முடியாது. அந்த வகையில் பல பக்தர்கள் அந்தப் பணிக்கு உதவ முன்வந்துள்ளார். ஊர்கூடி தேர்இழுப்பதுபோல் அவர்கள் திருப்பணியை செவ்வனே முடிக்க தயாராகி விட்டார்கள்.
அந்த திருப்பணிக்காக பொருளுதவியையோ, உடல்உழைப்பையோ பக்தர்கள் செய்ய முன்வர வேண்டும். அதுவும் முடியாதவர்கள் தங்கள் ஆலோசனைகளையும் தரலாம். ஆதியில் இக்கோவில் உருவானாலும், இதுவரை ஆகமபடி கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்த திருப்பணிக்கு உதவுவதன் மூலம் தனியரு சிறப்பை நீங்கள் பெறலாம். மேலும் ஆண்டாண்டு காலம் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். திருப்பணிக்கு உதவுகள், திருமுருகனின் திருவருளை பெறுங்கள்.
(தொடர்புக்கு- செண்பகராமன், கைபேசி எண் 9965762002)