டெலிவிஷனில் நேரடியாக ரிலீசாகும் சுந்தர் சி படம்
1 min read
Sunder C is a film that will be released live on television
26/10/2020
சுந்தர் சி-யின் அடுத்த படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சினிமாத் தொழில் முடங்கிக் கிடக்கிறது.
இதனால் தற்போது சில படங்களில் அமெசானின் ஓ.டி.டி. வெளியிடப்படுகிறது.
இதனைவிட ஒருபடிக்கு மேலே சுந்தர் சி ஒது படத்தை டெலிவிஷனில் நேரடியா ரிலீஸ் செய்கிறார். வருகிற தீபாவளி அன்று படத்தை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனார். அந்தப் படத்தின் பெயர் “நான் ரொம்ப பிஸி”
சுந்தர் சி ஏற்கனவே ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அவர் தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் அடுத்ததாக ‘மாயாபஜார்’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். பத்ரி இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், யோகி பாபு, அஸ்வின், வி.டி.வி.கணேஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ருதி மராத்தே, ரித்திகாசென், மாஸ்டர் சக்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘நான் ரொம்ப பிஸி’ என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று நேரடியாக சன் டி.வி.யில் ஒளிபரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.