May 26, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகை டெல்னா டேவிஸ் சின்னத்திரைக்கு வருகிறார்

1 min read

Actress Delna Davis is coming to the iconic screen

22/10/2020

நடிகை டெல்னா டேவிஸ் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வருகிறார்.

நடிகை டெல்னா டேவிஸ்

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர ஆக்கம், 49 ஓ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறியிருக்கிறார்.

அன்பே வா

அன்பே வா என்னும் புதிய மெகாத் தொடர் உருவாகி வருகிறது. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக விராட் நடிக்கிறார். மேலும் வினயா ப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லாபோஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, உருவாகி வரும் இந்த தொடரை சரிகமா இந்தியா லிட் சார்பாக, விஜயலட்சுமி தயாரிக்கிறார். பிரின்ஸ் இமானுவேல் இயக்கி வருகிறார். தரண் குமார் இசையமைத்து வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.