ஆர்யாவுடன் சண்டை போடும் இயக்குனர்
1 min read
Director fighting with Arya
2/11/2020
படப்பிடிப்பல் நடிகர் ஆர்யாவுடன் இயக்குனர் சண்டைப்போட்ட படம் வலைதளத்தில் பரவி வருகிறது.
நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா தமிழ் சினிமா படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டவர். இவரை வைத்து இயக்குனர் பா.ரஞ்ஜித் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
பா.ரஞ்ஜித் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர்.
தற்போது ஆர்யாவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு “சல்பேட்டா” என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.
சண்டை போடுவதுபோல்…
இந்த நிலையில் ஆர்யாவுடன் இயக்குனர் பா.ரஞ்சித் குத்து சண்டை போடுவது போல புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார் ஆர்யா.
இந்தப்படத்தில் வில்லனாக டைரக்டர் மகிழ்திருமேனி நடிக்கிறார். இது தவிர சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்பட பலர் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.