June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலை தீபத்துக்கு ஏன் சிறப்பு?

1 min read

Why is Thiruvannamalai special for the Maha deepam?

28-11-2020
திருவண்ணாமலை எண்ணற்ற சிறப்புகளை கொண்டது. கார்த்தி- கை தீபம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது அத்திருத் தலமே. உலகிலேயே தான்தான் பெரியவர் என்பதில் விஷ்ணுவு- க்கும் பிரம்மாவுக்கும் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது மாபெரும் நெருப்பாய் சிவபெருமான் அவர்கள் முன் எழுந்தார். அதனை கண்டு இருவரும் அச்சம் கொண்டனர். பின்னர் சிவன் சுய ரூபத்தில் எழுந்தருளி தன்னை அடி-முடி காண்பவர்யாரோ அவரே பெரியவர் என்றார். விஷ்ணு பன்றி யாகமாறி அடியை காண முயன்றார். பிரம்மா அன்னப்பறவையாக முடியை காண பறந்தார்.ஆனால் இருவராலும் அது முடியவில்லை. அந்த இரு மூர்த்தி- களின் ஆணவத்தை அகற்றவே சிவபெருமான் நெருப்பாக காட்சி- தந்தார். அதை நினைவூட்டும் வகையில்தான் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் மலைமீது ஏற்றப்படும் மகாதீபத்தை வழிபடுவதால் எண்ணற்ற பலனை பெறலாம். குறிப்பாக அன்று திருவண்ணாமலை சென்றால் குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே உருவாகும் பிணக்குகள் நீங்கிஒற்றுமை ஏற்படும். அதற்கான புராண காரணத்தை காணலாம்.
ஒருமுறை பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்தினாள். அவ்வளவுதான் உலகமே இருண்டு ஸ்தபித்து விட்டது. நிலைமையை உணர்ந்த அன்னை பார்வதி கைகளை விலக்கி கொண்டாள். ஆனாலும் சிவனின் கோபத்துக்கு ஆளானாள். தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடவும், பாவத்தை போக்கவும் பூவுலகு வந்து தவம் செய்ய முனைந்தாள். அதற்கு அன்னை தேர்ந்தெடுத்த இடம் காஞ்சிபுரம்.அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை வந்து தவம் இருக்குமாறு கூறினார். அதன்படி பார்வதி திருவண்ணாமலை வந்து கவுதம முனிவரின் உதவியோடு பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். அங்கு சிவன் ஜோதி வடிவாய்காட்சி கொடுத்து பின்னர் அன்னைக்கு தன் உடலில் சரிபாதியை தந்தார். அத்திருக் கோலமே அர்த்தநாரீசுவரர்.
பார்வதியின் மீதான கோபத்தை மன்னித்து அவளை தன்னோடு இணைத்து கொண்ட தலம் திருவண்ணாமலை என்பதால் அங்கு சென்று வழிபட்டால் நமது குடும்பத்தில் உருவாகும் சண்டையும் தீர்ந்து அன்பும், பாசமும் பெருகும்.
இங்கு கார்த்திகை தீபத்திருநாளை அன்னை பார்வதி தேவியே நடத்தியதாக கூறப்படு கிறது.மலையில் மகாதீபம் ஏற்றப்- படும்போது கோவிலில் சிவபெருமான் அர்த்தநாரீசுவரர் கோலத்தில் எழுந்தருள்வார். இதனை தரிப்பதாலும் பல பலன்களை பெறலாம்.
திருவண்ணாமலையில் புவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது நல்லது. மலையையே சிவனாக கருதி அதனை வலம் வரவேண்டும். கிரிவலப் பாதையில் ஆங்காங்கே சிவலிங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும ஒவ்வொரு கிரகத்துக்கு உரிய பலனை கொடுக்கம் எனவே நவக்கிரகத்தில் எந்த தோஷம் உள்ளவர்களும் அஙங்கு சென்று கிரிவலம் வந்தால் தோஷம் நீங்கி பலனை பெறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *