April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,430 people in Tamil Nadu today

29/11/2020

தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) 1,430 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 46 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

தற்போது தமிழகத்தில் 11 ஆயிரத்து 73 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் இன்று மட்டும் 1,453 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 56 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவுக்குஉயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
11 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக…

இன்றுகொரோனா கண்டறியப்பட்டவர்களின் விவரம் மாவட்ட வாரியாக வருமாறு:-

அரியலூர் – 8
செங்கல்பட்டு – 78
சென்னை – 393
கோவை – 142
கடலூர் – 18
தர்மபுரி – 14
திண்டுக்கல் – 23
ஈரோடு – 44
கள்ளக்குறிச்சி – 14
காஞ்சிபுரம் – 70
கன்னியாகுமரி – 29
கரூர் – 11
கிருஷ்ணகிரி – 11
மதுரை – 29
நாகை – 31
நாமக்கல் – 38
நீலகிரி – 7
பெரம்பலூர் – 1
புதுக்கோட்டை – 12
ராமநாதபுரம் – 3
ராணிப்பேட்டை – 6
சேலம் – 67
சிவகங்கை – 10
தென்காசி – 9
தஞ்சாவூர் – 31
தேனி – 10
திருப்பத்தூர் – 8
திருவள்ளூர் – 80
திருவண்ணாமலை – 17
திருவாரூர் – 23
தூத்துக்குடி – 19
திருநெல்வேலி – 15
திருப்பூர் – 65
திருச்சி – 22
வேலூர் – 34
விழுப்புரம் – 21
விருதுநகர் – 17
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 0
உள்நாடு – 0
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0

மொத்தம் – 1,430

சென்னை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் விவரம் வருமாறு:-

கோடம்பாக்கம் – 365
அண்ணா நகர் – 382
தேனாம்பேட்டை – 380
தண்டையார்பேட்டை – 248
ராயபுரம் – 240
அடையாறு- 417
திரு.வி.க. நகர்- 381
வளசரவாக்கம்- 312
அம்பத்தூர்- 309
திருவொற்றியூர்- 118
மாதவரம்- 181
ஆலந்தூர்- 167
பெருங்குடி- 171
சோழிங்கநல்லூர்- 84
மணலியில் – 58

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.