April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒப்பில், ஒப்பிலா, ஒப்பில்லாத, ஒப்பிலாத- சொற்களின் விளக்கம்/ சிவகாசி முத்துமணி

1 min read
Seithi Saral featured Image

Tami Ilakkanam By Sivakasi Muthumani

30/11/2020

ஒப்பில், ஒப்பிலா, ஒப்பில்லாத, ஒப்பிலாத- இச்சொற்கள் யாவும் ஒரே பொருள் குறித்தன. இணையற்ற அல்லது ஈடற்ற ஒப்புமை கூற இயலாத என்பது தான் மேற்கண்ட சொற்களின் பொருள்.
இலக்கணத்தின் அடிப்படையில் பார்த்தால் எல்லாச் சொற்களும் எதிர்மறைச் சொற்கள்.

முதல் சொல்லாகிய ஒப்பில் என்பது இல்லை என்பதில் இறுதி எழுத்து லை கெட்டு நிற்பதால் இது கடைக்குறை விகாரம்.

அடுத்த சொல் ஒப்பிலா. இச்சொல்லில் இறுதியில் உள்ள த என்னும் உயிர்மை கெட்டு நிற்பதால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
அடுத்த சொல் ஒப்பில்லாத. இது எதிர்மறை பெயரெச்சம்.

அடுத்த சொல் ஒப்பிலாத. ஒப்பில்லாத என்னும் சொல்லில் இடையில் வரும் ல் என்னும் எழுத்து கெட்டு நிற்பதால் இதை இடைக்குறை விகாரம் என்று சொல்லலாம்.

இந்தச் சொற்கள் எல்லாம் ஒரே பொருளைத் தருவதாக அமைந்தாலும் செய்யுளில் புலவர்கள் தமக்கு என்ன அசை வரவேண்டும்? தாம் எழுதும் பாடலில் எத்தனை அசைகள் கொண்ட சீராக அமைய வேண்டும், என்பதைக் கருத்தில் கொண்டு, இவற்றுள் பொருத்தமானதைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
மற்றபடி இச்சொற்கள் குறிக்கும் பொருளில் எவ்வகை மாற்றமும் இல்லை.

விளக்கத்திற்காக சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்

ஒப்/பில்… ஈரசை.. நேர் நேர்.. தேமா

ஒப்/பிலா…. ஈரசை… நேர்நிறை.. கூவிளம்

ஒப்/பில்/லா… மூவசை.. நேர் நேர் நேர்.. தேமாங்காய்

ஒப்/பில்/லா/த.. நாலசை.. நேர் நேர் நேர் நேர்… தேமாந்தண்பூ

ஒப்/பிலா/த.. மூவசை.. நேர் நிரை நேர்

1.அம்மையே அப்பா ஒப்பிலா மணியே… அன்பினில் விளைந்த ஆரமுதே (திருவாசகம் மாணிக்கவாசகர்.).

  1. ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி.. வானோர் குருவனே போற்றி… (மாணிக்கவாசகர்)
  2. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில்… (மாணிக்கவாசகர்)
  3. முப்பது கோடி ஜனம் சங்கம் முழுவதும் பொதுவுடமை.
    ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை…(. பாரதியார்) யார் யாருக்கு என்ன என்ன சீர் வேண்டும்… எத்தனை அசை வேண்டும்.. அதற்கேற்றாற்போல் இச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் பாங்கு மேலே சில எடுத்துக்காட்டுகளில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

-க.முத்துமணி.

ஒப்பில், ஒப்பிலா, ஒப்பில்லாத, ஒப்பிலாத. இச்சொற்கள் யாவும் ஒரே பொருள் குறித்தன. இணையற்ற அல்லது ஈடற்ற ஒப்புமை கூற இயலாத என்பது தான் மேற்கண்ட சொற்களின் பொருள்.
இலக்கணத்தின் அடிப்படையில் பார்த்தால் எல்லாச் சொற்களும் எதிர்மறைச் சொற்கள் .முதல் சொல்லாகிய ஒப்பில் என்பது இல்லை என்பதில் லை கெட்டு நிற்பதால் கடைக்குறை விகாரம்.
அடுத்த சொல் ஒப்பிலா. இச்சொல்லில் த கெட்டு ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
அடுத்த சொல் ஒப்பில்லாத இது எதிர்மறை பெயரெச்சம்.
அடுத்த சொல் ஒப்பிலாத. இதில் ல் என்னும் எழுத்து கெட்டு இடைக்குறை விகாரம் என்று சொல்லலாம்.
இந்தச் சொற்கள் எல்லாம் ஒரே பொருளைத் தருவதாக அமைந்தாலும் செய்யுளில் புலவர்கள் என்ன அசை வரவேண்டும்? எத்தனை அசைகள் கொண்ட சீராக அமைய வேண்டும், என்பதைக் கருத்தில் கொண்டு பொருத்தமானதைப் பயன்படுத்தியிருப்பார்கள்.மற்றபடி இச் சொற்கள் குறிக்கும் பொருளில் எவ்வகை மாற்றமும் இல்லை.

ஒப்/பில்… ஈரசை.. நேர் நேர்.. தேமா

ஒப்/பிலா…. ஈரசை… நேர்நிறை.. கூவிளம்

ஒப்/பில்/லா… மூவசை.. நேர் நேர் நேர்.. தேமாங்காய்

ஒப்/பில்/லா/த.. நாலசை.. நேர் நேர் நேர் நேர்… தேமாந்தண்பூ

ஒப்/பிலா/த.. மூவசை.. நேர் நிரை நேர்

1.அம்மையே அப்பா ஒப்பிலா மணியே… அன்பினில் விளைந்த ஆரமுதே (திருவாசகம் மாணிக்கவாசகர்.).

  1. ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி.. வானோர் குருவனே போற்றி… (மாணிக்கவாசகர்)
  2. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில்… (மாணிக்கவாசகர்)
  3. முப்பது கோடி ஜனம் சங்கம் முழுவதும் பொதுவுடமை.ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை…(. பாரதியார்) யார் யாருக்கு என்ன என்ன சீர் வேண்டும்… எத்தனை அசை வேண்டும்.. அதற்கேற்றாற்போல் இச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் பாங்கு மேலே சில எடுத்துக்காட்டுகளில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.
    க.முத்துமணி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.