சகா என்பதன் பொருள் என்ன?/ சிவகாசி முத்துமணி
1 min read
What is the meaning of Saha- Tamil Ilakkiyam by Sivakasi Muthumani
சகா என்னும் சொல்லின் பொருள் என்ன?
“என்ன சகல எப்படி இருக்கீங்க?”
முதற்கண் சக என்பது வடசொல் தான் என்று அறிக.. இச்சொல் உடன்(ஒரே) என்னும் பொருள்பட வரும்.
எடுத்துக்காட்டுச் சொல்லாம்… அப்படியானால் தான் புரிந்து கொள்ள இயலும். சக+உதரன்…. சகோதரன்… உதரம் என்றால் வயிறு… சகோதரன் என்பது. ஒரே வயிற்றில் பிறந்தவன் என்று பொருள்படும்… ஒரே வயிற்றில் பிறந்தவர். சக உதரத்தில் பிறந்தவர்கள். அதாவது நான் பிறந்த வயிற்றில் பிறந்தவன், என் சகோதரன். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த அனைவரும் சகோதரர். அதை நாம் உடன் பிறந்தவன் என்னும் சொல்லால் குறிக்கிறோம்… அதைப் போல்தான் சகோதரி என்பதும் புரியுமல்லவா?.
…
ஷகி… என்னும் வடசொல் உடனிருந்து மனையறம் நடத்தும் மனைவியைக் குறிக்கும்… அல்லது காதலியைக் குறிக்கும்…பிரியசகி என்னும் சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்… அன்புள்ள தோழி என்றும் பொருள் கொள்ளலாம்.
“என்னுடன் வாழும் அன்பான பெண்ணே, உணவும் செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை” -காதலியைப் பிரிந்து தலைவன் பாடியது இப்பாட்டு.
ஒரே வீட்டில் பெண் எடுத்த இருவரை சகலை, அல்லது சகலர் அல்லது சகலப் பாடி என்று குறிப்பிடுவது உண்டு. ஒரே கட்சியில் இருக்கும் நண்பரை பார்த்து இவர் நம் சகக்கட்சி தோழர் என்று சொல்வார்கள்… ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்…
ஒரு பேருந்தில் அல்லது புகைவண்டியில் என்னோடு பயணம் செய்பவர் என் சக பயணி. என்னுடன் பணியாற்றுபவர் சக பணியாளர். ஒரே காலத்தில் வாழ்ந்தவர் சக காலத்தில் வாழ்ந்தவர். கம்பனும் அவ்வையும் சக காலப் புலவர்கள்.
நம்முடைய ஆண்டு என்பதால் சக ஆண்டு என்போம்.
உன் சகவாசமே வேண்டாம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சகவாசம் என்பது சேர்ந்து இருக்கும் நட்பு…வாசம்..வாழ்க்கை. நட்பு என்பது சேர்க்கை தானே.. வாசம் என்பது வாழ்வது உன்னோடு சேர்ந்து வாழும் வாழ்வு வேண்டாம்.
எனவே சகா என்று சொன்னால் நண்பன் எனப் பொருள் தரும்.. சகா என்னும் சொல் உடன் இருப்பவன் அதாவது நண்பன் என பொருள்படுகிறது. அதன் பண்மைச் சொல் சகாக்கள்.. சகாக்கள் என்றால் நண்பர்கள்.