பாட்சா படத்தில் நடித்தவர் மரணம்
1 min read
The actor who starred in the film Patsa is dead
1&1&2021
பாட்சா உள்பட பல தமிழ்படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ் மரணம் அடைந்தார்.
நடிகர் நர்சிங் யாதவ்
தெலுங்கு பட உலகிறல் பிரபல நடிகராக விளங்கியவர் நர்சிங் யாதவ். இவர் தமிழில் ரஜினியின் படமான பாட்ஷா விஜய் நடித்த குருவி மற்றும் பூஜை, ராஜபாட்டை, ஆட்டநாயகன், லாடம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான சிகிச்சையை பெற்று வந்தார்.
மரணம்
இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நர்சிங்கின் மரணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.