June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைச்சரவையில் 50 சதவீதம் இடஒதுக்கீடு; கமல் வாக்குறுதி

1 min read

50 per cent reservation in the cabinet; Kamal promises

3.1.2021

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதற்கு முன்பு குடும்பத்தலைவிகளுக்கு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சேலம் மற்றும் வேலூர் பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசிய்தாவது:-

இடஒதுக்கீடு

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை மற்றும் சம ஊதியம் அளிப்பதே தனது லட்சியம்.

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்தும். அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *