May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக டி.ராஜேந்தர் மனைவி தேர்வு

1 min read

T. Rajender’s wife elected as President of Tamil Nadu Film Producers Association

26.1.2021

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம்

டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக டி.ராஜேந்தர், பொதுச்செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், ஜே.சதீஷ் குமார், துணை தலைவர்களாக சிங்காரவடிவேலன், பிடி.செல்வகுமார், பொருளாளராக கே.ராஜன் பொறுப்பேற்றனர்.

வினியோகஸ்தர் சங்கத்தில் டி.ராஜேந்தர் தலைவராக இருப்பதால் இந்த சங்கத்தில் தலைவர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் டி.ராஜேந்தர் அந்தப் பதியை ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தரும் (நடிகர் சிம்புவின் தாய்) கவுரவ ஆலோசகராக டி.ராஜேந்தரும் சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.