May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்கட்டி, சிலை அமைத்து பாலாபிஷேகம்

1 min read

Builds a temple and a statue Balabhishekam for actress Nithi Agarwal

15.2.2021

நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் சென்னையில் கோவில் கட்டி அதில் சலை அமைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

நடிகை நிதி அகர்வால்

நடிகை அகர்வால் ஐதராபாத்தில் இந்தி பேசும் மார்வாரி குடும்பத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார். இவர் தனது பள்ளி கல்வியை வித்யாஷில்ப் அகாடமி மற்றும் வித்யா நிகேதன் பள்ளியில் பயின்றார். பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். இவர் பாலே, கதக் மற்றும் இடை ஆட்டம் ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றுள்ளார்.
நிதி அகர்வால் 2017 ம் ஆண்டு ‘முன்னா மைகேல்’ என்ற இந்தி மொழித் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2018 இல் ‘சவ்யசாசி’ என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் மாதவன் உடன் இணைத்து நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் ‘மிஸ்டர். மஜ்னு’ மற்றும் ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில்…

2021 ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து ஈஸ்வரன் என்ற திருப்பப்படத்திலும் நடித்துள்ளார்.

அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கோவில்

இந்த நிலையில், நடிகை நிதி அகர்வாலுக்காக தமிழ்நாட்டில் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். காதலர் தினமான நேற்று அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடிகை நிதி அகர்வால் கூறும்போது, “இது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். இதைவிட சிறந்த காதலர் தின பரிசு இருக்க முடியாது. என் மீது இவ்வளவு அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.