May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர் சூர்யாவின் 40வது படத்துக்கான பூஜை

1 min read

Pooja for actor Surya’s 40th film

15.2.2021

நடிகர் சூர்யாவின் 40வது படத்துக்கான பூஜை நடந்தது. ஆனால் இந்த பூ¬ஜில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா கடைசியாக நடித்த சூரரைப்போற்று படம் ஓடி.டி.யில் வெளியானது. இதனை அடுத்து அவரது அடுத்தப்படம் தயாராக உள்ளது-. அந்தப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்குகிறார். இது நடிகர் சூர்யாவின் 40வது படமாகும்.
இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இன்று(திங்கட்கிழமை) பூஜையுடன் தொடங்கி உள்ளது. கொரோனா சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் நடிகர் சூர்யா இதில் கலந்து கொள்ளவில்லை.

அதேநேரம் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, சுப்பு பஞ்சு, தங்கதுரை ஆகியோரும், நடிகைகள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கடைசியாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் பணியாற்றிய ரத்னவேலு, தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளார்.

வடிவேலு நடிக்கிறாரா?

இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வடிவேலு ஏற்கனவே சூர்யாவுடன், வேல், ஆறு, ஆதவன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.