May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

புதுச்சேரி காங். எம்.எல்.ஏ. ராஜினாமா

1 min read

Puducherry Cong. MLA Resign

15.2.2021
புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த மாநில அமைச்சராக இருந்த நமச்சிவாயம் ராஜினாமா செய்து பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (திங்கட்கிழமை) தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதுச்சேரி காங். தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் அமைச்சராவார்.
மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்துள்ளது குறித்து சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தன்னிடம் ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.