May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா?

1 min read

DMDK in alliance with AIADMK Doubts have been raised as to whether it will last.

4.3.2021

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகளை தே.மு.தி.க. கேட்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு..க கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. வுக்கு முதலில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. 23 தொகுதிகளை அந்த கட்சிக்கு அ.தி.மு.க. ஒதுக்கி கொடுத்தது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனால் அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையிலான பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் நேற்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடை பெறுவதாக இருந்தது. ஆனால் தே.மு.தி.க. தரப்பில் பேச்சுவார்த்தைக்கு யாரும் செல்லவில்லை.

அதேநேரத்தில் தே.மு.தி.க. துணை செயலாளரான எல்.கே. சுதிஷ் கூட்டணிக்காக அ.தி.மு.க. தான் கெஞ்சிக் கொண்டு இருக்கிறது என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? இல்லை விலகி தனித்து போட்டியிடுமா? என்பது பலத்த கேள்வியாக உருவெடுத்துள்ளது.

அ.தி.மு.க.வுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது பற்றி தே.மு.தி.க. நிர்வாகிகள் யாரும் வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.