June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து பிரியங்கா போட்டி?

1 min read

Priyanka’s match against Pon.Radhakrishnan?

6.4.2021

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

விருப்பமனு

தமிழக சட்டசபைத் தேர்தலோடு கன்னியாகுமரி பாராளுமன்றத்துக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மறைந்த முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார்.

பிரியங்கா

அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு அளித்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *