April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகர் விருது; விஜய் சேதுபதிக்கு துணை நடிகர் விருது; சிறந்தபடம் “அசுரன்”

1 min read

Best Actor Award for Actor Sagittarius; Supporting Actor Award for Vijay Sethupathi; Best Picture “Monster”

22/3/2021
நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகர், விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது மற்றும் அசுரன் படம் சிறந்த தமிழ் படம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு 67வது தேசிய விருதை அறிவித்து உள்ளது. இதில் தமிழ் படத்துக்கான விருதில் சிறந்த படமாக அசுரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த நடிகர் தனுஷ்( அசுரன்), சிறந்த துணை நடிகர் விஜய் சேதுபதி( சூப்பர் டீலக்ஸ்) விருது கிடைத்துள்ளது.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு…. விருது வென்றவர்கள் விவரம் வருமாறு:-

சிறந்த தமிழ் படம் – அசுரன்

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகர் – மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)

சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

சிறந்த இயக்குனர் – சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹ¨ரைன் – இந்தி)

சிறந்த படம் – மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – விக்ரம் மோர்(கன்னடம்)

சிறந்த நடன அமைப்பாளர் – ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த வசனகர்த்தா – விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி

சிறந்த ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த ஒலிக்கலவை – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த அறிமுக இயக்குனர் – மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் – கஸ்தூரி (இந்தி)

சிறந்த படத்தொகுப்பு – நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

சிறந்த பாடகர் – பி.பராக்(கேசரி, இந்தி)

சிறந்த பாடகி – சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

சிறப்பு பிரிவு, ஜூரி விருது – ஒத்த செருப்பு (தமிழ்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.